முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு காய்ச்சல் - அரசு நிகழ்ச்சிகள் ரத்து!

Cold Fever M K Stalin DMK Durai Murugan
By Sumathi Jun 19, 2022 08:10 AM GMT
Report

முதல்வர் மு.க ஸ்டாலின்க்கு உடல் நலம் சரி இல்லை, மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்க சொல்லி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க ஸ்டாலின்

சென்னையில் இன்று மறைந்த VP ராமன் அவர்களின் புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது.

முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு காய்ச்சல் -  அரசு நிகழ்ச்சிகள் ரத்து! | Chief Minister Mk Stalin Is Not In Good Health

கடைசி நேரத்தில் நீர்வளத்துறை துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், முதலமைச்சர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை,

உடல் நலம் சரி இல்லை

அவருக்கு பதிலாக அவரது உரையை என்னை கொடுத்து விட்டு வருமாறு முதல்வர் அனுப்பி உள்ளார். விபி ராமன் குடும்பம் லாயிட்ஸ் கார்னர் என்று சொல்லித்தான் பழக்கம், அதே கோபாலபுரம் பகுதியில் வாசிக்க கூடியவர்கள் தான் நாங்கள்.

முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு காய்ச்சல் -  அரசு நிகழ்ச்சிகள் ரத்து! | Chief Minister Mk Stalin Is Not In Good Health

நீங்கள் ஒரு கார்னர், நாங்கள் ஒரு கார்னர். இப்படி ஒரு சுயசரிதை நூலை வி பி ராமன் எழுதியிருந்தால், அதனை அப்போது கலைஞரே வெளியிட்டு இருப்பார். தற்போது அவரது மகன் எழுதியுள்ளதால், கலைஞரின் மகனான நான் வெளியிடும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

அமைச்சர் துரைமுருகன்

மகுடம் மருத்துவராக இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் முடிசூடா மன்னனாக இருந்து மறைந்தவர் VP ராமன். பேரறிஞர் அண்ணா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் VP ராமன் சென்றது இந்த நூலில் பதிவிடபட்டு உள்ளது.

எம்ஜிஆர் VP இராமனை அவரது கட்சியில் சேர அழைத்த போது அவர் சேரவில்லை, அதற்கான காரணத்தை PS ராமன் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் என்று துரைமுருகன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.     

அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் - சர்ச்சையை கிளப்பிய விளம்பரம்!