யோகாவால் மக்களையும் நாடுகளையும் இணைக்க முடியும் : பிரதமர் நரேந்திர மோடி உரை
சர்வதேச யோகா தினம் இன்று உலகமெங்கும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
பிரமாண்ட யோகா
அந்தவகையில் நாடு முழுவதும் 75 நகரங்களில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக யோகா தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடத்த முடியாததால், இந்த ஆண்டு பிரமாண்டமாக அனுசரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரு அரண்மனையில் நடைபெறும் பிரமாண்ட யோகா நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று துவக்கி வைத்தார். இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடியுடன் மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி வெள்ளை உடையில் யோகா மேற்கொண்டார்.
#WATCH LIVE | Prime Minister Narendra Modi leads the #InternationalDayOfYoga celebrations from Karnataka's Mysuru.
— ANI (@ANI) June 21, 2022
https://t.co/dpviUOw5up
பிரதமர் மோடியுடன் பாஜக நிர்வாகிகள் பலர் மேடையில் யோகா மேற்கொண்டனர்,இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதரமர் மோடி, :
ஒட்டுமொத்த உலகிற்கும் யோகா அமைதியை தருகிறது.மனதையும், உடலையும் சீராக வைத்திருக்க யோகா உதவுகிறது.யோகா மூலம் 2கோடிக் கணக்கான மக்கள் அமைதியின் சூழலை உருவாக்குவார்கள்
யோகாவால் தான் மக்களையும் நாடுகளையும் இணைக்க முடியும்
யோகாவால் தான் மக்களையும் நாடுகளையும் இணைக்க முடியும். மேலும் யோகா நம் அனைவருக்கும் பிரச்சனைக்கான ஒரு தீர்வாக மாறும்.
இந்த முழு பிரபஞ்சமும் நமது உடலிலிருந்தும் ஆன்மாவிலிருந்தும் தொடங்குகிறது. யோகா நமக்குள் இருக்கும் அனைத்தையும் நமக்கு உணர்த்துகிறது, விழிப்புணர்வு உணர்வை உருவாக்குகிறது" என்று அவர் கூறினார்.
இந்த வருடம் யோகாவிற்கான தீம் "மனித நேயத்துக்கான யோகா" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 8வது யோகா தினம் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஹிட்லரைப் போலதான் மோடிக்கும் மரணம் - காங். தலைவர் சர்ச்சை பேச்சு