Tuesday, Apr 8, 2025

டென்மார்க்கில் செய்தியாளர்களுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய பிரதமர் மோடி - வைரலாகும் வீடியோ

Narendra Modi
By Nandhini 3 years ago
Report

ஜெர்மனி பயணத்தை தொடர்ந்து டென்மார்க் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கும் சென்றார். 3 நாடுகளிலும் 65 மணி நேரம் செலவிடும் பிரதமர் மோடி, அந்நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல், பேச்சுவார்த்தை என 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 

இதனையடுத்து, 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த மோடி, இன்று டெல்லி திரும்பினார்.  

இந்நிலையில் டென்மார்க்கில் இருக்கும்போது பிரதமர் மோடியிடம், செய்தியாளர்கள் பேட்டியெடுக்க முயற்சி செய்தனர். சந்திப்பு முடிந்து தனியாக பிரதமர் மோடி காருக்குச் செல்லும்போது செய்தியாளர்கள் இடை மறித்து, தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறினர்.

செய்தியாளர்கள் சட்டென மைக்கை நீட்டி கேள்வி எழுப்பியதை சற்றும் எதிர்ப்பாராத பிரதமர் மோடி , ‘ஓ மை காட்’ எனக்கூறிவிட்டு பதிலளிக்க முடியாமல் திணறினார்.

தொடர்ந்து அவர்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் அங்கிருந்து விறுவிறுவென்று புறப்பட்டுச் சென்றார்.

தற்போது, சமூகவலைத்தளங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளிக்க முடியாமல் பிரதமர் மோடி திணறியது வைரலாகி வருகிறது.