அதிமுகவிற்கு அழிவே கிடையாது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட்டதால், கூட்டத்தில் பங்கேற்காமல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் வெளியேறினார்.
ஒற்றை தலைமை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்:
அதிமுகவினை அழிக்க முடியாது
ஒற்றை தலைமை யார் என்பதை கட்சி முடிவு செய்யும் எனக் கூறிய ஜெயக்குமார் கட்சியில் உள்ள பெரும்பாலன நிர்வாகிகள் அதிமுகவில் ஒற்றை தலமை அவசியம் என்று வலியுறுத்தியதாக கூறினார்.
மேலும் சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார் கட்சிக்கு சம்மந்தம் இல்லாதவர் குறித்து ஏன் பேச வேண்டும் என கேள்வி எழுப்பினார் மேலும் அதிமுகவிற்கு அழிவே கிடையாது எனக் கூறினார்.
விகடன் மட்டும் அல்ல இனிமே எல்லார் மேலையும் வழக்கு பாயும் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்