விகடன் மட்டும் அல்ல இனிமே எல்லார் மேலையும் வழக்கு பாயும் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
திமுக அரசை பற்றி பேசினாலே ஜெயில் தான் எனவும், தமிழாகத்தில் ஜனநாயக விரோத ஆட்சி நடந்து வருவதால் காவல் துறையை ஏவல் துறையாக மாற்றியுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சி.பா. ஆதித்தனாரின் 41வது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
திமுக போல சர்வாதிகார ஆட்சி, சர்வாதிகார தலைவர் அதிமுகவில் இல்லை என்றார். ஊடகங்கள் மீது தொடுக்கப்பட்ட ஜனநாயக தாக்குதலே வழக்கு பதிவு என்ற அவர் கருத்து சுதந்திரம் குறித்து எதிர்கட்சியாக இருந்த போது வாய் கிழிய பேசினார். இப்போது எங்கே போனது கருத்து சுதந்திரம்.
ஜூனியர் விகடன் மீது மட்டுமல்ல இனி யார் மீது வேண்டுமானலும் வழக்கு தொடரப்படும். இது அனைவருக்குமான அச்சுறுத்தல். அரசை பற்றி பேசினாலே ஜெயில் தான் என்ற அவர் ஜனநாயக விரோத ஆட்சி நடந்து வருகிறது காவல் துறையை ஏவல் துறையாக மாற்றி தமிழகத்தை தலை குனிய வைக்கும் செயல் என்று கூறிய ஜெயக்குமார்.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்த பின் பல மாநிலங்கள் குறைத்துள்ளது, வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏன் குறைக்கவில்லை என குற்றஞ்சாட்டிய அவர் ஆட்சிக்கோ, அமைச்சருக்கோ சுயபுத்தி இல்லையா?
தோழமை கட்சி ஆட்சி நடக்கும் கேரள அரசு கூட குறைத்திருக்கிறது, வாய் கிழிய பேசும் நீங்கள் ஏன் குறைக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.