Tuesday, Jul 22, 2025

முன்னாள் அமைச்சர் கைது அதிர்ச்சியில் அதிமுக

arrested admk cvshanmugam
By Irumporai 3 years ago
Report

விழுப்புரத்தில், திமுக அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, பெண்களுக்கான ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் ஆகியவை திமுக ஆட்சியில் ரத்து ரத்து செய்யப்பட்டதையும், சொத்துவரி உயர்த்தப்பட்டதையும், பெண்கள் மற்றும் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளையும் கண்டித்து, விழுப்புரம் பழையப் பேருந்து நிலைய வளாகத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், அதிமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  

முன்னாள் அமைச்சர் கைது அதிர்ச்சியில் அதிமுக | Ex Minister Cv Shanmugam Arrested By Police

இந்த நிலையில், அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தாமல், பிரதான சாலையில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடத்தியதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சிவி சண்முக உள்ளிட்ட அதிமுகவினர் அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.