பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் - தமிழக அரசு அதிரடி..!
பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது கட்டாயம் என , பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .
தொடர் விபத்துக்கள்
சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர் தீக்சித், கடந்த மார்ச் மாதம் பள்ளி வேனில் சிக்கி பலியானார்.
வேனில் மறந்து வைத்துவிட்ட பொருளை மீண்டும் எடுக்க சென்ற போது, ஓட்டுநர் பார்க்கிங் செய்வதற்காக வேனை பின்னோக்கி நகர்த்திய நேரத்தில், மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
சிசிடிவி கேமரா கட்டாயம்
இந்நிலையில், தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 2012ல் தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, அனைத்து பள்ளி பேருந்துகளின் முன்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்தை பின்னோக்கி நகர்த்தும் போது, பின்பகுதி முழுவதும் தெளிவாக தெரியும் அளவுக்கு, பேருந்தின் பின்பகுதியிலும் கேமரா பொருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தின் பின்பகுதியில் எச்சரிக்கை செய்யும் வகையில், சென்சார் பொருத்தப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சிறந்த எழுத்தாளர்களுக்கு இனி 1 லட்சம் ரூபாய் உதவித்தொகை - தமிழக அரசு அறிவிப்பு..!