சிறந்த எழுத்தாளர்களுக்கு இனி 1 லட்சம் ரூபாய் உதவித்தொகை - தமிழக அரசு அறிவிப்பு..!
தமிழகத்தில் உள்ள சிறந்த எழுத்தாளர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை 1 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உதவி தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு
தமிழக அரசின் அரசாணை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணி அமைப்பு நிதி மூலம் கிடைக்கும் வட்டித்தொகையிலிருந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர்,
மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் உருவாக்கிய 10 படைப்புகள் மற்றும் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரின் படைப்பு ஆகிய 11 சிறந்த இலக்கிய படைப்புகளை தெரிவு செய்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் நூல் வெளியிட ஆகும் செலவு அல்லது உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு லட்சம் உதவிதொகை
இந்நிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 1 லட்சமாக உயர்த்தியுள்ளதாக அரசாணையில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்பு உதவித்தொகை 50 ஆயிரமாக ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.