தமிழக அரசு பணிகளில் ஆதிதிராவிடர்,பழங்குடியினருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு..!
தமிழக அரசு பணியில் ஆதிதிராவிடர்,பழங்குடியினருக்கு 10 ஆயிரத்து 402 பணியிடங்கள் முகமைகள் மூலம் நிரப்ப அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,2021 - 2022 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில்,
அரசுத்துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள் சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பை செயல்படுத்த , தலைமைச்செயலகதுறைகளிடமிருந்து பிரிவு வாரியாக உறுதி செய்யப்பட்டு பெறப்பட்ட எண்ணிக்கை யின் அடிப்படை யில்,
ஆதிதிராவிடருக்கு 8,173 இடங்களும், பழங்குடியினருக்கு 2,229 இடங்களும் ஆக மொத்தம் 10 ஆயிரத்து 402 கண்டறியப்பட்ட குறைவு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்ற அரசாணையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ளது.
இந்த பணியிடங்களை முகமைகள் மூலம் நிரப்ப அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
கோட்டாபயவின் வீட்டில் பிள்ளையான் குழுவுடன் அசாத் மௌலானா! அம்பலப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம் IBC Tamil
அரசியல் பேரங்களை அம்பலப்படுத்தியதால் சுட்டுக் கொல்லப்பட்ட சாட்சிகள்! நீர்கொழும்பு சிறையிலும் 20 துப்பாக்கிச் சூடு IBC Tamil