குழந்தையை புதைக்க இடம் தரவில்லை - பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் தாய் குற்றச்சாட்டு

VenkateshearaMatriculationSchool SchoolVanIssue ChennaiSchoolIssue
By Petchi Avudaiappan Mar 28, 2022 04:20 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சென்னையில் பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் உடலை புதைக்க அருகிலுள்ள தேவாலயம் இடம் தர மறுத்ததாக அவனது தாய் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னை விருகம்பாக்கம் இளங்கோவன் நகரை சேர்ந்த வெற்றிவேல்- ஜெனிபர் தம்பதியினரின் 7 வயது மகன் தீக்‌ஷித் ஆழ்வார்திருநகரில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம்போல் இன்று காலை 8.40 மணிக்கு வீட்டில் இருந்து பள்ளி வேனில் சிறுவன் பள்ளிக்கு சென்றுள்ளான். 

பள்ளி வேனை பூங்காவனம் என்பவர் ஓட்டிய நிலையில் பள்ளி வளாகத்தை அடைந்ததும் வேனில் இருந்து தீக்‌ஷித் உள்ளிட்ட மாணவர்கள் இறங்கி வகுப்பு அறைக்கு சென்றனர். அப்போது வேனை பின்னோக்கி இயக்கி வாகனத்தை வெளியே எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக மாணவன் தீக்‌ஷித் மீது மோதியது. இதில் மாணவனின் தலைமீது வேனின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 

இதனைத் தொடர்ந்து தீக்‌ஷித் உடலை வாங்க மறுத்த அவரது பெற்றோர், பள்ளி நிர்வாகிகளை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என கண்ணீர் மல்க தெரிவித்தனர். இதனிடையே  தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி மாணவர்களை வேனிலிருந்து இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஊழியர் ஞானசக்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் மாணவனின் பெற்றோரை தொடர்புக் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆறுதல் கூறினார். இந்நிலையில் மாணவன் தீக்‌ஷித்தின் பெற்றோர் கலப்பு திருமணம் செய்துக் கொண்டவர்கள். இதனால் தீக்‌ஷித்தின் விருப்பப்படி அவனது உடலை புதைக்க அருகிலுள்ள தேவாலயங்களில் தான் இடம் கேட்டதாகவும், ஆனால் சந்தா கட்டவில்லை என்றும், மதுரையில் உள்ள சம்பந்தப்பட்ட தேவாலயத்தில் அனுமதிச்சீட்டு வாங்கி வருமாறும் கேட்டதாக தாய் ஜெனிபர் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.