பெண்களுக்கு 40 வயதில் தொப்பை உறுதி; என்ன காரணம் - எப்படி தடுப்பது?
மெனோபாஸ் காலத்துக்கு பின் உடல் எடை அதிகரிப்பு காரணங்கள் குறித்து பார்க்கலாம்.
மெனோபாஸ்
பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் உடல் எடை அதிகரிப்பது வழக்கமாக உள்ளது. மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் உடல் கொழுப்பின் மறுபகிர்வு ஏற்படலாம். இதனால் தொப்பை அதிகரிக்கும்.
பெரும்பாலான பெண்கள் வயதாகும் போது அவர்களின் உடல் செயல்பாடு குறைகிறது. பெற்றோர் அல்லது குடும்பவழியாக வயிறை சுற்றி அதிக எடை இருந்தாலும் உடல் எடை அதிகரிக்கும். மாதவிடாய் நின்றவர்கள் உடல்பயிற்சி செய்வது பயனுள்ளதாக இருக்கும்.
மெனோபாஸ் தொப்பை எடையை குறைக்கவும், தடுக்கவும் கலோரி அளவை குறைக்க வேண்டும். எரிக்கும் கலோரிகளை அதிகரிக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், உப்பு, காஃபின் போன்ற பானங்களை தவிர்க்கவோ, கட்டுப்படுத்தவோ வேண்டும். அதிக கொழுப்பு அதிக கலோரி மற்றும் உணவுகள் போன்றவை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
உடல் எடை அதிகரிப்பு
வயதாகும் போது தூங்குவது அவசியம். போதுமான தூக்கம் பெறாதவர்களுக்கு வயிற்று கொழுப்பு அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மெனோபாஸ் தொப்பையை தடுக்க முடியாது. எடை அதிகரிப்பு என்பது உடலில் மெனோபாஸ் காலத்தில் உண்டாகும் மாற்றங்களினால் வரக்கூடியது.
எல்லோருக்கும் இது சாத்தியம் அல்ல என்பதால் உடலை எப்போதும் கட்டுக்குள் வைக்க கவனமாக இருப்பதன் மூலம் எடை அதிகரிக்காமல் தடுக்கலாம்.
மன அழுத்தத்தால் வெளியாகும் கார்டிசோல் என்னும் ஹார்மோனால் அடிவயிற்று கொழுப்பு சேர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தியானம், யோகா போன்றவற்றை செய்வது பலன் அளிக்கும்.