இந்த 5 உடல் வலிகள் இருக்கா; அப்போ மாரடைப்பு அபாயம் நிச்சயம் - கவனம்!
மாரடைப்பை உணர்த்தும் 5 உடல் வலிகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
மாரடைப்பு
உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணமாக மாரடைப்பு உள்ளது. சில தினங்களுக்கு முன்பே அதன் அறிகுறிகள் உடலில் வெளிப்படக்கூடும்.
மார்புப் பகுதியில் லேசாக அல்லது அசௌகரியமான வலி, அழுத்தம், இறுக்கமான வலி, சிறிது அழுத்துவது போன்ற உணர்வு ஆகியவை மாரடைப்பு அறிகுறியாக கருதப்படுகிறது.
அறிகுறிகள்
இரண்டு கைகளிலும் லேசாக அல்லது அசௌகரியமான வலி, அடிக்கடி மார்பிலிருந்து இடது கை வரை பரவுவது மாரடைப்புக்கான சாத்தியமான அறிகுறி. தொப்பையின் மேல் பகுதியில் ஏற்படும் வலி சில நேரங்களில் மாரடைப்பைக் குறிக்கும். வாந்தியுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம்.
தொண்டை அல்லது கீழ் தாடையில் வலி. நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யும்போது இந்த வலி ஏற்படலாம். இது மூச்சுத் திணறல் அல்லது கழுத்தில் அழுத்தமான உணர்வை கொடுக்கலாம்.
இதில், 10% மாரடைப்புகள் மிகவும் லேசான அல்லது வலியே இல்லாமல் இருப்பதாக அறியப்படுகிறது. இது பொதுவாக நீரிழிவு நோயாளிகள், வயதானவர்கள் மற்றும் நரம்பியல் நோயாளிகளுக்கு ஏற்படுகிறது.
மேலும், கடுமையான அல்லது தொடர்ந்து, வியர்வை, தலைச்சுற்றல் மற்றும் பதற்ற உணர்வு ஆகியவை இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.