இந்த கிழமையில் தான் மாரடைப்பு மோசமாக வருமாம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்
திங்கள்கிழமைகளில்தான் மிகவும் மோசமான மாரடைப்பு வருவதாக கூறப்படுகிறது.
மாரடைப்பு
பெல்ஃபாஸ்ட் ஹெல்த் அண்ட் சோஷியல் கேர் டிரஸ்ட் மற்றும் அயர்லாந்தில் உள்ள ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் டாக்டர்களால் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அதன் கண்டுபிடிப்புகள் மான்செஸ்டரில் நடந்த பிரிட்டிஷ் கார்டியோவாஸ்குலர் சொசைட்டி (BCS) மாநாட்டில் வழங்கப்பட்டன. 20,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆய்வு செய்யப்பட்டனர்.
ஆய்வு அறிக்கை
மாரடைப்பின் தீவிர வகைகளில் ஒன்றான ST-பிரிவு எலிவேஷன் மாரடைப்பு (STEMI) நோயாளிகளிடம் காணப்படுகிறது. ஒரு பெரிய கரோனரி தமனி முற்றிலும் தடுக்கப்பட்டு, ஆக்ஸிஜன் மற்றும் இரத்த விநியோகத்தை துண்டிக்கிறது.
திங்கட்கிழமை அன்று மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவை உடலின் தூக்கம் அல்லது விழித்திருக்கும் சுழற்சி ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்றும் கூறுகின்றனர். இங்கிலாந்தில், STEMI மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 30,000 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய இருதயநோய் நிபுணர் டாக்டர் ஜாக் லாஃபன் பேசிய போது "வேலை வாரத்தின் தொடக்கத்திற்கும் STEMI இன் நிகழ்வுக்கும் இடையே வலுவான புள்ளிவிவர தொடர்பு இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்” என்று தெரிவித்தார்.