Doctors advice..மாரடைப்பு வராமல் தடுக்க எளிய வழிகள் - இதோ!
மாரடைப்பில் நமது வாழ்க்கைமுறை மாற்றங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.இதய ஆரோக்கியம் மிகவும் அவசியமான ஒன்று.
இதய செயலிழப்பு
உடல் உறுப்புகள் அனைத்தும் தங்கு தடையின்றி சிறப்பாக செயல்பட இதயம் தான் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. அதனால் தான் இதயம் செயலிழப்பு என்பது உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது. தொலைபேசி பயன்பாடு உங்க கண்களுக்கு மட்டுமல்ல உங்க இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது கிடையாது.
அதிகப்படியான தொலைபேசி பயன்பாடு உங்களுக்கு மன அழுத்தத்தையும், இதன் காரணமாக இதய நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதய ஆரோக்கியத்தை பேண தொலைபேசி திரையில் இருந்து விலகி சிறிது நேரம் மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவற்றை செய்து வரலாம்.
அதிக அளவில் நீர்
ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 2-3 காய்கறிகளையும் பழங்களையும், முழு தானியங்கள் நட்ஸ் மற்றும் விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல், தினமும் அதிக அளவில் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நாளைக்கு ஒரு கப் காபி குடிப்பது மட்டுமே சிறந்த ஒன்றாகும். மேலும் உணவில் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியமாக வாழ 30-45 நிமிடங்கள் உடல் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
உடற்பயிற்சி
கார்டியோ உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுங்கள். உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே வயது, உயரம் மற்றும் எடை இவற்றை சரியான அளவில் பராமரிக்கவும்.
சரியான உடல் நிறை குறியீட்டெண்ணை பராமரிப்பது அவசியம். சரியான நேரத்தில் தூங்குவது மிகவும் அவசியம். ஒரு ஆரோக்கியமான தூக்க சுழற்சியை பின்பற்றுங்கள். ஒவ்வொரு இரவும் 7-8 மணிநேர தங்கு தடையின்றி, அமைதியான தூக்கத்தை பெற வேண்டும்.
புகைப்பழக்கமும் ஆல்கஹாலும் உங்க இதயத்தை பாதிப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே இதனை வாழ்வில் தவிர்ப்பது உயிரை காக்கும்.