அடேங்கப்பா... தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்?

Cucumber
By Nandhini May 19, 2022 07:16 AM GMT
Report

வெள்ளரிக்காய் பிடிக்காது என்று கூறுபவர்கள் மிகவும் குறைவுதான். அதிக குளிரிச்சியைக் கொடுக்கும் வெள்ளிரிக்காய் நமது அன்றாட வாழ்வில் பல நன்மைகளை வழங்குகிறது.

நாம் உண்ணும் உணவில் பெரும்பாலான காய்கறிகளை சமைத்து தான் சாப்பிடுகிறோம். அதில் ஒரு சில காய்கறிகளை மட்டுமே பச்சையாக சமைக்காமல் சாப்பிடுகிறோம். அதில் முக்கியமான ஒன்று தான் வெள்ளரிக்காய்.

தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம் -

முக அழகிற்கு

அழகிலும் கூட பல விதத்தில் உதவி புரியும். வெள்ளரிக்காயில் 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. மேலும் இது தண்ணீர் குடிக்காததை ஈடுசெய்யும். தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் சருமக அழகு கூடிக்கொண்டே போகும்.

உடல் எடை குறைக்க

தினமும் வெள்ளக்கரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாகவே உள்ளது. கொழுப்பும் இல்லாததால் உடல் எடையை மிக விரைவில் குறைக்க முடியும். சாலட்டுகளாகவும் தயாரித்து சாப்பிட்டு வரலாம். வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிட்டாலும், குறைவான கலோரியே உடலில் சேரும்.

மலச்சிக்கல் பிரச்சினை போக்க

தினமும் காலை அல்லது மதிய வேளைகளில் சிறிது வெள்ளரிக்காய்களை சாப்பிடுவதால் நார்ச்சத்து கிடைக்க பெற்று செரிமான திறன் மேம்பட்டு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

அதிக ஊட்டச்சத்து

தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து போன்றவை நமக்கு கிடைக்கும். தினமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் சுலபமாக உடலுக்கு ஊட்டச்சத்து கிடைத்துவிடும்.

இதயத்திற்கு

தினமும் வெள்ளரிக்காய்யை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் கிடைக்கும். இதய நோய்களுக்கான காரணமாக இருக்கும் கொழுப்பை அகற்ற வெள்ளரிக்காயில் இருக்கும் நார்ச்சத்து உதவி செய்யும். வெள்ளக்கரிக்காயில் சோடியமும் குறைவாக இருப்பதால், இதய நோய் அபாயத்தை கட்டுப்படுத்தும்.

நீரிழிவு நோய்க்கு

தினமும் வெள்ளக்கரிக்காயை சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் என்று மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு சார்ந்த ஆபத்தை கட்டுப்படுத்த உதவும். ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கவும் உதவி செய்யும்.