மது பிரியர்களின் கவனத்திற்கு; கல்லீரலை சுத்தம் செய்யனுமா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க
கல்லீரலை சுத்தம் செய்து கழிவுகளை நீக்க ஒரு எளிமையான செய்முறையை இந்த பதிவில் கான்போம்.
கல்லீரல்
மருத்துவ உலகம் முக்கியமான உறுப்புகளாக மூளை, இதயம், சிறுநீரகம் என்று கூறுவது உண்டு. ஆனால், இவை அனைத்தை விடவும் உடம்பில் மிக முக்கிய உறுப்பு கல்லீரல் தான்.உடலுக்கு தேவையான பல்வேறு வேலைகளை செய்கிறது.
உடலுக்கு கிடைக்கும் ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை அகற்றி, சர்கரை அளவை சீர் செய்து,ரத்தம் உறைதலை முறைப்படுத்தும் பணிகளை செய்கிறது.இவ்வாறு நம் உடலில் கல்லீரல் 500க்கும் மேற்பட்ட வேலைகளை செய்து நம்மை ஆரோக்கியத்துடன் இருக்க உதவுகிறது.
உறுப்பின் பணி
அல்பியூமின் என்னும் புரதம், ரத்தத்தில் உள்ள திரவங்கள் கசிந்துவிடாமல் காத்து உடல் முழுவதும் ஹார்மோன்கள், வைட்டமின்கள் மற்றும் என்சைம்களை சுமந்து செல்கிறது. செரிமானத்துக்கு மற்றும் சிறு குடலில் உள்ள கொழுப்பை உறிஞ்ச உதவும் பித்தம் என்னும் திரவத்தை உற்பத்தி செய்கிறது.
அமினோ அமிலங்கள் அளவை ரத்தத்தில் ஆரோக்கியமான அளவு வைத்திருப்பதை கல்லீரல் உறுதிப்படுத்திகிறது. ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை நீக்கி,வைட்டமின் ஏ, டி, இ, கே, பி12, இரும்பு மற்றும் காப்பர் சத்துக்களை போதிய அளவு சேமித்து வைக்கிறது.
குறுதியில் உள்ள அதிகளவு குளுக்கோஸை நீக்குகிறது. அதை க்ளைகோஜென்களாக மாற்றுகிறது. தேவைப்படும்போது அது க்ளைகோஜென்களை குளுக்கோஸாக மாற்றும்.
பானம்
இஞ்சி, பூண்டு, பட்டை ஆகியவற்றை உரலில் சேர்த்து தட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீருடன் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்தவுடன் வடிகட்டி, அதில் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, தேன் கலந்து பருக வேண்டும்.
இவ்வாறு காலை, மாலை என இருவேளையும் உடற்பயிற்சியுடன் பானத்தை பருகிவந்தால் கல்லீரலில் உள்ள 95 சதவீதம் கழிவுகளை அகற்றலாம். குறிப்பாக மதுபிரியர்கள் தினமும் இருவேளை பருகிவர கல்லீரல் சுத்தமாகும்.
இந்த பானம் நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது. இதை தொடர்ந்து பருகி வர ஃபேட்டி லிவர் பிரச்னையை 80 சதவீதம் குணப்படுத்துகிறது.