உடல் உறுப்பு தானம்; சட்டப்போராட்டம் நடத்திய தந்தையின் உயிரை காப்பாற்றிய சிறுமி

Kerala
By Thahir Feb 20, 2023 08:28 AM GMT
Report

சட்டப் போராட்டம் நடத்தி தனது தந்தையின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த  சிறுமி ஒருவர்.

வழக்கு தொடர்ந்த சிறுமி - பாராட்டிய நீதிபதி 

இந்தியாவிலேயே சிறு வயதில் கல்லீரலை தனது தந்தைக்கு தானமாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார் அந்த சிறுமி.

இந்தியாவில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உடல் தானம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த தேவானந்தா என்ற 17 வயது பள்ளி மாணவி தனது தந்தை பிரதீஷுக்கு உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி வழங்குமாறு கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

தனது தந்தையின் உயிரை காப்பாற்ற கல்லீரலை தானம் செய்த முன்வந்தபோது வயதை காரணம் காட்டி மருத்துவர்கள் மறுத்துவிட்டதாக மாணவி தெரிவித்து இருந்தார்.

kerala-teen-girl-donate-liver-to-father

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கல்லீரல் தானம் வழங்க மாணவிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டதோடு, மாணவியை வெகுவாக பாராட்டினார்.

தந்தையின் உயிரை காப்பாற்றிய சிறுமி 

இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பிரதீஷுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

kerala-teen-girl-donate-liver-to-father

இதையடுத்து, தந்தையும், மகளும் பூரணம் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்த சிறுமியின் தந்தை தற்போது கல்லீரல் மாற்றப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

மேலும் கல்லீரல் தானம் செய்து உதவிய தனது மகளை அவர் நெஞ்சாரப் பாராட்டி இருக்கிறார். இந்த உடல் உறுப்பு தானத்தின் மூலம் இந்தியாவிலேயே சிறு வயதில் தானம் செய்தவர் எந்த பெருமையை மாணவி தேவானந்தா பெற்றிருக்கிறார்.