கல்லீரல் தானம் கிடைத்தும் உயிரிழந்த பிரபல நடிகர் - அதிர்ச்சி தகவல்

Death Odisha
By Sumathi Mar 03, 2023 11:52 AM GMT
Report

நடிகர் பிண்டு நந்தா உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

பிண்டு நந்தா

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் பிண்டு நந்தா . 1996 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்துவருகிறார். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கல்லீரல் தானம் கிடைத்தும் உயிரிழந்த பிரபல நடிகர் - அதிர்ச்சி தகவல் | Odia Film Actor Pintu Nanda Passes Away Hyderabad

ஒடிசாவைச் சேர்ந்த இவர் கல்லீரல் பாதிப்பு காரணமாக புதுடெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பிலியரி சயின்ஸ் நிறுவனத்தத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவருக்கு கல்லீரல மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்திருக்கின்றனர்.

மறைவு

ஆனால் அவருக்கு உடனடியாக உறுப்பு கிடைக்காமல் ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து பிண்டு நந்தாவிற்கு அவரது உறவினர் கல்லீரல் தானம் அளிக்க முன்வந்தார்.

கல்லீரல் தானம் கிடைத்தும் உயிரிழந்த பிரபல நடிகர் - அதிர்ச்சி தகவல் | Odia Film Actor Pintu Nanda Passes Away Hyderabad

இதனையடுத்து அவருக்கு உறுப்பு தான அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் இரத்தம் ஒவ்வாமை உள்ளிட்ட காரணங்களால் சிகிச்சை பலனின்றி உயரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.