நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - நாகப்பட்டினம்
தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 29-வது தொகுதி நாகப்பட்டினம்.
நாகப்பட்டினம்
1957 மற்றும் 1962-ஆம் ஆண்டுகளின் தேர்தலில் இரண்டு உறுப்பினர் கொண்ட தொகுதியாக இருந்து பின்னர் ஒரு உறுப்பினர் கொண்ட தொகுதியாக மாற்றம் பெற்றது நாகப்பட்டினம். இந்த தொகுதி, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தனித்தொகுதி ஆகும்.
2008-ஆம் ஆண்டின் மறுசீரமைப்பிற்கு முன்பு நாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் நாகப்பட்டினம், திருவாரூர் (தனி), நன்னிலம் (தனி), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மற்றும் மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
தொகுதி மறுசீரமைப்பின் போது, மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி, தஞ்சை மக்களவை தொகுதியுடன் இணைக்கப்பட்டு, அதற்கு பதிலாக கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு, நாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் இணைக்கப்பட்டது.
தற்போது நாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் நன்னிலம், திருவாரூர், நாகப்பட்டினம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி (தனி) மற்றும் கீழ்வேளூர் (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தேர்தல் வரலாறு
நாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி அதிகபட்சமாக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் ம. செல்வராசு அதிகபட்சமாக 4 முறை வெற்றி பெற்றுள்ளார்.
1957 எம். அய்யாக்கண்ணு - கே. ஆர். சம்பந்தம் (காங்கிரஸ்)
1962 கோபால்சாமி - தென்கொண்டார் (காங்கிரஸ்)
1967 வி. சாம்பசிவம் (காங்கிரஸ்)
1971 எம். காத்தமுத்து (கம்யூனிஸ்ட்)
1977 எஸ். ஜி. முருகையன் (கம்யூனிஸ்ட்)
1979* கே. முருகையன் (கம்யூனிஸ்ட்)
1980 தாழை மு. கருணாநிதி (திமுக)
1984 எம்.மகாலிங்கம் (அதிமுக)
1989 ம. செல்வராசு (கம்யூனிஸ்ட்)
1991 பத்மா (காங்கிரஸ்)
1996 ம. செல்வராசு (கம்யூனிஸ்ட்)
1998 ம. செல்வராசு (கம்யூனிஸ்ட்)
1999 ஏ. கே. எஸ். விஜயன் (திமுக)
2004 ஏ. கே. எஸ். விஜயன் (திமுக)
2009 ஏ. கே. எஸ். விஜயன் (திமுக)
2014 கே. கோபால் (அதிமுக)
2019 ம. செல்வராசு (கம்யூனிஸ்ட்)
வாக்காளர்கள் எண்ணிக்கை
கடந்த 22/01/24 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையின் படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில்,
ஆண் வேட்பாளர்கள் - 2,68,725 பேர்
பெண் வேட்பாளர்கள் - 2,80,694 பேர்
மூன்றாம் பாலினத்தவர் - 24 பேர் என மொத்தமாக 5,49,443 வாக்காளர்கள் உள்ளனர்.