நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - பெரம்பலூர்

Tamil nadu Election Perambalur
By Karthick Mar 14, 2024 11:39 PM GMT
Report

தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 25-வது தொகுதி பெரம்பலூர்.

பெரம்பலூர்

2008-ஆம் ஆண்டின் மறுசீரமைப்பிற்கு முன்பு, பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் பெரம்பலூர் உப்பிலியாபுரம் வரகூர், அரியலூர், ஆண்டிமடம்,ஜெயங்கொண்டம் ஆகிய 6 சட்ட சபை தொகுதிகள் இருந்தன.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - கரூர்

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - கரூர்

தொகுதி மறுசீரமைப்பின் போது, ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகியவை சிதம்பரம் தொகுதியில் இணைக்கப்பட்டன. திருச்சி மக்களவை தொகுதியில் இருந்த லால்குடி, முசிறி கரூர் மக்களவை தொகுதியில் இருந்த குளித்தலை போன்ற சட்டமன்ற தொகுதிகள் பெரம்பலூர் தொகுதியில் இணைக்கப்பட்டன.

முசிறி தொகுதியிலிருந்து மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு அந்த தொகுதியும், துறையூர்(தனி) தொகுதியும் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் சேர்க்கப்பட்டன. தனித்தொகுதியாக இருந்து பெரம்பலூர் மக்களவை தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்பு, பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.

[

தற்போது இந்த மக்களவை தொகுதியில் குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி), பெரம்பலூர் (தனி) போன்ற 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

தேர்தல் வரலாறு

1951-ஆம் ஆண்டு முதல் மக்களவை தேர்தலை எதிர்கொண்டு வரும் பெரம்பலூர் தொகுதியில் திமுக அதிக முறையாக 7 முறை வெற்றிபெற்றது. தற்போதைய திமுகவின் துணை பொதுச்செயலாளரான ஆ.ராசா இங்கு அதிக முறை வெற்றி பெற்ற வேட்பாளராக 3 முறை வெற்றி பெற்றுள்ளார்.

2009-ஆம் ஆண்டு நடிகர் நெப்போலியன் இந்த தொகுதியில் தான் திமுக சார்பில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

1951 பூவராகசாமி படையாச்சி (தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி)

1957 எம். பழனியாண்டி (காங்கிரஸ்)

1962 இரா. செழியன் (திமுக)

1967 அ. துரைராசு (திமுக)

1971 அ. துரைராசு (திமுக)

1977 அ. அசோக்ராஜ் (அதிமுக)

1980 கே. பி. எஸ். மணி (காங்கிரஸ்)

1984 எஸ். தங்கராசு (அதிமுக)

1989 எஸ். தங்கராசு (அதிமுக)

1991 அ. அசோக்ராஜ் (அதிமுக)

1996 ஆ. ராசா (திமுக)

1998 கபி. ராஜரத்தினம் (அதிமுக)

1999 ஆ. ராசா (திமுக)

2004 ஆ. ராசா (திமுக)

2009 நெப்போலியன் (திமுக)

2014 ஆர். பி. மருதராஜா (அதிமுக)

2019 தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து (இந்திய ஜனநாயகக் கட்சி)

வாக்காளர்கள் எண்ணிக்கை

22.01.2024 அன்று வெளியிட வாக்காளர்கள் எண்ணிக்கையின் படி, பெரம்பலூர் மாவட்டத்தில்,

ஆண் வாக்காளர்கள் -  2,80,301 பேர்

பெண் வாக்காளர்கள் - 2,91,435 பேர்

மூன்றாம் பாலினத்தவர் - 12 பேர் என மொத்தமாக 5,71,748  வாக்காளர்கள் உள்ளனர்