நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - கரூர்

Tamil nadu Election Karur
By Karthick Mar 12, 2024 11:36 PM GMT
Report

தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 23-வது தொகுதி கரூர்.

கரூர்

2008-ஆம் ஆண்டு மறுசீரமைப்பிற்கு முன்பு கரூர் மக்களவை தொகுதிக்கு உட்பட சட்டமன்ற தொகுதிகள் - அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம்.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - திண்டுக்கல்

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - திண்டுக்கல்

தொகுதி மறுசீரமைப்பின் போது, கரூர் மக்களவைத் தொகுதியில் இருந்த மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம் ஆகியவை நீக்கப்பட்டு புதியதாக மணப்பாறை, விராலிமலை ஆகிய இரு தொகுதிகள் இணைக்கப்பட்டன. இவை இரண்டும் புதிதாக உருவாக்கப்பட்டவை ஆகும்.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - கோயம்புத்தூர்

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - கோயம்புத்தூர்

தற்போது கரூர் மக்களவை தொகுதியில் வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மணப்பாறை மற்றும் விராலிமலை போன்ற சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

தேர்தல் வரலாறு

1957 முதல் மக்களவை தேர்தல் நடத்தப்படும் இந்த தொகுதியில் காங்கிரஸ் 7 முறையும், அதிமுக 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிக முறை வெற்றி பெற்ற வேட்பாளராக அதிமுகவின் தம்பிதுரை 4 முறை இந்த தொகுதியில் இருந்து மக்களவை சென்றுள்ளார்.

1957 பெரியசாமி கவுண்டர் (காங்கிரஸ்)

1962 ஆர். ராமநாதன் செட்டியார் (காங்கிரஸ்)

1967 முத்துச்சாமி கவுண்டர் (சுதந்திராக் கட்சி)

1971 கே. கோபால் (காங்கிரஸ்)

1977 கே. கோபால் (காங்கிரஸ்)

1980 ஏ. ஆர். முருகையா (காங்கிரஸ்)

1984 ஏ. ஆர். முருகையா (காங்கிரஸ்)

1989 மு. தம்பிதுரை (அதிமுக)

1991 என். முருகேசன் (அதிமுக)

1996 கே. நாட்ராயன் (தமிழ் மாநில காங்கிரஸ்)

1998 மு. தம்பிதுரை (அதிமுக)

1999 எம். சின்னசாமி (அதிமுக)

2004 கே. சி. பழனிசாமி (திமுக)

2009 மு. தம்பிதுரை (அதிமுக)

2014 மு. தம்பிதுரை (அதிமுக)

2019 ஜோதிமணி (காங்கிரஸ்)

கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் வேட்பாளராக களமிறங்கிய ஜோதிமணி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை சுமார் 4,20,546 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்காளர்கள் எண்ணிக்கை

இந்த ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை பட்டியலின் படி,

ஆண் வாக்காளர்கள் - 4,22,528 பேர்

பெண் வாக்காளர்கள் - 4,56, 571 பேர்

மூன்றாம் பாலினத்தவர் 65 பேர் என மொத்தமாக 8,79,164 வாக்காளர்கள் உள்ளனர்.