நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - கோயம்புத்தூர்
தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 20-வது தொகுதி கோயம்புத்தூர்.
கோயம்புத்தூர்
2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிறகு முன்பு, கோயம்பத்தூர் மக்களவை தொகுதியில் சிங்காநல்லூர், கோவை மேற்கு, கோவை கிழக்கு, பேரூர், பல்லடம், திருப்பூர் ஆகிய தொகுதிகள் இருந்தன.
தொகுதி சீரமைப்பின் போது, முன்பிருந்த பேரூர் மற்றும் திருப்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக சூலூர், கவுண்டம்பாளையம் ஆகியவை சட்டமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன.
தற்போது கோயம்பத்தூர் மக்களவை தொகுதியில் பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு மற்றும் சிங்காநல்லூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தேர்தல் வரலாறு
1957 பார்வதி கிருஷ்ணன் (சிபிஐ)
1962 ராமகிருஷ்ணன் (காங்கிரஸ்)
1967 கே. இரமணி (சிபிஎம்)
1971-73 கா. பாலதண்டாயுதம் (சிபிஐ)
1973-77 பார்வதி கிருஷ்ணன் (சிபிஐ)
1977 பார்வதி கிருஷ்ணன் (சிபிஐ)
1980 இரா. மோகன் (திமுக)
1984 சி. கே. குப்புசுவாமி (காங்கிரஸ்)
1989 சி. கே. குப்புசுவாமி (காங்கிரஸ்)
1991 சி. கே. குப்புசுவாமி (காங்கிரஸ்)
1996 மு. இராமநாதன் (திமுக)
1998 சிபி இராதாகிருஷ்ணன் (பாஜக)
1999 சிபி இராதாகிருஷ்ணன் (பாஜக)
2004 கே. சுப்பராயன் (சிபிஐ)
2009 பி. ஆர். நடராஜன் (சிபிஎம்)
2014 நாகராஜன் (அதிமுக)
2019 பி. ஆர். நடராஜன் (சிபிஎம்)
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இரண்டு முறை நாடாளுமன்ற வேட்பாளரை அளித்த ஒரு தொகுதி என்ற தனி சிறப்பும் கோயம்புத்தூர் தொகுதியை சாரும்.
வாக்காளர்கள் எண்ணிக்கை
கடந்த 1.1.2024 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர்கள் பட்டியலின் படி கோயம்பத்தூர் மாவட்டத்தில்,
ஆண் வாக்காளர்கள் - 15,09,906 பேர்
பெண் வாக்காளர்கள் - 15,71,093 பேர்
மூன்றாம் பாலினத்தவர் 595 பேர் என மொத்தமாக 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர்.