நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - சேலம்

Tamil nadu Election Salem
By Karthick Mar 03, 2024 11:49 PM GMT
Report

தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 15-வது தொகுதி சேலம்.

சேலம்

2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு, திருச்செங்கோடு தொகுதியில் இருந்த எடப்பாடி சட்டமன்றத் தொகுதி சேலம் மக்களவை தொகுதியின் கீழ் கொண்டு வரப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - ஆரணி

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - ஆரணி

தற்போது சேலம் மக்களவை தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு மற்றும் வீரபாண்டி போன்ற 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - திருவண்ணாமலை

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - திருவண்ணாமலை

இது வரை நடைபெற்ற அனைத்து மக்களவை தேர்தலையும் சந்தித்துள்ள சேலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி தான் அதிக முறை வெற்றிபெற்றுள்ளது.

தேர்தல் வரலாறு

1952 எஸ். வி. ராமசாமி (காங்கிரஸ்)

1957 எஸ். வி. ராமசாமி (காங்கிரஸ்)

1962 எஸ். வி. ராமசாமி (காங்கிரஸ்)

1967 க. இராசாராம் (திமுக)

1971 இ. ஆர். கிருட்டிணன் (திமுக)

1977 பி. கண்ணன் (அதிமுக)

1980 சி. பழனியப்பன் (திமுக)

1984 ரங்கராஜன் குமாரமங்கலம் (காங்கிரஸ்)

1989 ரங்கராஜன் குமாரமங்கலம் (காங்கிரஸ்)

1991 ரங்கராஜன் குமாரமங்கலம் (காங்கிரஸ்) 

1996 ஆர். தேவதாஸ் (தமாகா)

1998 வாழப்பாடி ராமமூர்த்தி (சுயேட்சை)

1999 டி. எம். செல்வகணபதி (அதிமுக)

2004 கே. வி. தங்கபாலு (காங்கிரஸ்)

2009 செம்மலை (அதிமுக)   

2014 பன்னீர்செல்வம் (அதிமுக)

2019 எஸ். ஆர். பார்த்திபன் (திமுக)

வாக்காளர்கள் எண்ணிக்கை

கடந்த 1.1.2024 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர்கள் பட்டியலின் படி சேலம் மாவட்டத்தில் ,

ஆண் வாக்காளர்கள் - 14,56,299 பேர்

பெண் வாக்காளர்கள் - 14,71,524 பேர்

மூன்றாம் பாலினத்தவர்  - 299 என 29,28,122 மொத்தமாக வாக்காளர்கள் உள்ளனர்