நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - திருவண்ணாமலை
தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 11-வது தொகுதி திருவண்ணாமலை.
திருவண்ணாமலை
தமிழகத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று திருவண்ணாமலை.
தொகுதி மறுசீரமைப்பின் போது, திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அந்த தொகுதியில் இருந்து சில தொகுதிகளையும், வந்தவாசி தொகுதியில் இருந்த சில தொகுதிகளையும் எடுத்து திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
இம்மக்களவைத் தொகுதியில் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர் மற்றும் கலசப்பாக்கம் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தேர்தல் வரலாறு
2009 த. வேணுகோபால் (திமுக)
2014 வனரோஜா (அதிமுக)
2019 அண்ணாத்துரை (திமுக)
வாக்காளர்கள் எண்ணிக்கை
16 ஆவது மக்களவைத் தேர்தல் கணக்கீட்டின் அடிப்படையில், வாக்காளர் எண்ணிக்கை வருமாறு,
ஆண் வாக்காளர்கள் - 6,64,261பேர்
பெண் வாக்காளர்கள் - 6,67,440 பேர்
மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் என மொத்தம் 13,31,724 வாக்காளர்கள் உள்ளனர்.