நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - தருமபுரி
தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 10வது தொகுதி தருமபுரி.
தருமபுரி
2008 ஆம் ஆண்டின் தொகுதி மறுசீரமைப்பிறகு முன்பு இந்த மக்களவை தொகுதியில் அரூர் (தனி), மொரப்பூர், தருமபுரி, பென்னாகரம், மேட்டூர், தாரமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
மறுசீரமைக்கப்பட்ட பிறகு, பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) மற்றும் மேட்டூர் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தேர்தல் வரலாறு
1977 வாழப்பாடி ராமமூர்த்தி (காங்கிரஸ்)
1980 கே. அர்ஜுனன் (திமுக)
1989 எம். ஜி. சேகர் (அதிமுக)
1991 கே. வி. தங்கபாலு (காங்கிரஸ்)
1996 தீர்த்தராமன் ( தமாகா)
1998 பாரி மோகன் (பாமக)
1999 பு. த. இளங்கோவன் (பாமக)
2004 ஆர். செந்தில் (பாமக)
2009 இரா. தாமரைச்செல்வன் (திமுக)
2014 அன்புமணி ராமதாஸ் (பாமக)
2019 செந்தில்குமார் (திமுக)
வாக்காளர்கள் எண்ணிக்கை
16 ஆவது மக்களவைத் தேர்தல் கணக்கீட்டின் அடிப்படையில், வாக்காளர் எண்ணிக்கை வருமாறு,
ஆண் வாக்காளர்கள் - 6,82,875 பேர்
பெண் வாக்காளர்கள் - 6,47,083 பேர்
மூன்றாம் பாலினத்தவர் 76 பேர் என மொத்தம் 13,30,034 வாக்காளர்கள் உள்ளனர்.