நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - கிருஷ்ணகிரி
தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 9வது தொகுதி கிருஷ்ணகிரி தொகுதியாகும்.
கிருஷ்ணகிரி
2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் ஓசூர், தளி, காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, பர்கூர், பாலக்கோடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
பிறகு மறுசீரமைக்கப்பட்ட பிறகு, இந்த மக்களவை தொகுதியில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர் மற்றும் தளி என 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கும்.
தேர்தல் வரலாறு
1951 சி. ஆர். நரசிம்மன் (காங்கிரஸ்)
1957 சி. ஆர். நரசிம்மன் (காங்கிரஸ்)
1962 க. இராசாராம் (திமுக)
1967 கமலநாதன் (திமுக)
1971 தீர்த்தகிரி கவுண்டர் (காங்கிரஸ்)
1977 பி.வி.பெரியசாமி (அதிமுக)
1980 வாழப்பாடி ராமமூர்த்தி (காங்கிரஸ்)
1984 வாழப்பாடி ராமமூர்த்தி (காங்கிரஸ்)
1989 வாழப்பாடி ராமமூர்த்தி (காங்கிரஸ்)
1991 கே.வி.தங்கபாலு (காங்கிரஸ்)
1996 சி.நரசிம்மன் (த.மா.கா)
1998 கே.பி. முனுசாமி (அதிமுக)
1999 வெற்றிச்செல்வன் (திமுக)
2004 இ. கோ. சுகவனம் (திமுக)
2009 இ. கோ. சுகவனம் (திமுக)
2014 கே. அசோக் குமார் (அதிமுக)
2019 ஏ. செல்லக்குமார் (காங்கிரஸ்)
வாக்காளர் எண்ணிக்கை
16 ஆவது மக்களவைத் தேர்தல் கணக்கீட்டின் அடிப்படையில், வாக்காளர் எண்ணிக்கை வருமாறு,
ஆண் வாக்காளர்கள் - 6,91,163 பேர்
பெண் வாக்காளர்கள் - 6,61,297 பேர்
மூன்றாம் பாலினத்தவர் 113 பேர் என மொத்தம் 13,52,573 வாக்காளர்கள் உள்ளனர்.