நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - அரக்கோணம்
தமிழ்நாட்டின் 7-வது நாடாளுமன்ற தொகுதி அரக்கோணம்.
அரக்கோணம்
2008-ஆம் ஆண்டின் தொகுதி மறுசீரமைப்புக்குப் முன்பு அரக்கோணம் மக்களவை தொகுதிகளில் பள்ளிப்பட்டு, அரக்கோணம் (தனி), சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு, செய்யார் ஆகிய தொகுதிகள் இருந்தன.
தற்போது இந்த மக்களவை தொகுதியில் திருத்தணி, அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, இராணிப்பேட்டை, ஆற்காடு என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தேர்தல் வரலாறு
1977 ஓ. வி. அழகேசன் (காங்கிரஸ்)
1980 ஏ. எம். வேலு (காங்கிரஸ்)
1984 ஆர். ஜீவரத்தினம் (காங்கிரஸ்)
1989 ஆர். ஜீவரத்தினம் (காங்கிரஸ்)
1991 ஆர். ஜீவரத்தினம் (காங்கிரஸ்)
1996 ஏ. எம். வேலு (காங்கிரஸ்)
1998 சி. கோபால் (அதிமுக)
1999 எஸ். ஜெகத்ரட்சகன் (திமுக)
2004 அர. வேலு (பாமக)
2009 எஸ். ஜெகத்ரட்சகன் (திமுக)
2014 ஜி. ஹரி (அதிமுக)
2019 எஸ். ஜெகத்ரட்சகன் (திமுக)
வாக்காளர் எண்ணிக்கை
17 ஆவது மக்களவைத் தேர்தல் கணக்கீட்டின் அடிப்படையில், வாக்காளர் எண்ணிக்கை வருமாறு,
ஆண் வாக்காளர்கள் - 7,24,688 பேர்
பெண் வாக்காளர்கள் - 7,55,199 பேர்
மூன்றாம் பாலினத்தவர் 74 பேர் என மொத்தம் 14,79,961 வாக்காளர்கள் உள்ளனர்.