நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - காஞ்சிபுரம்
தமிழ்நாட்டின் 6-வது நாடாளுமன்ற தொகுதி காஞ்சிபுரம்.
காஞ்சிபுரம்
கடந்த 1951 ஆம் ஆண்டில் ஒரு தேர்தல் நடைபெற்ற நிலையில் அதனை தொடர்ந்து, 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மக்களவை தேர்தல் இந்த தொகுதியில் நடைபெற்று வருகிறது.
இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.2008ஆம் தொகுதி மறுசீரமைப்பின்போது இத்தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது.
செங்கல்பட்டு தொகுதியில் இடம் பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகளான திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகியவை இந்த மக்களவை தொகுதியில் அடங்கும்.
தேர்தல் வரலாறு
1951 ஏ. கிருஷ்ணசாமி (காமன்வீல் கட்சி)
2009 பி. விஸ்வநாதன் (காங்கிரஸ்)
2014 கே. மரகதம் (அதிமுக)
2019 க. செல்வம் (திமுக)
வாக்காளர் எண்ணிக்கை
17 ஆவது மக்களவைத் தேர்தல் கணக்கீட்டின் அடிப்படையில், வாக்காளர் எண்ணிக்கை வருமாறு,
ஆண் வாக்காளர்கள் - 7,94,839 பேர்
பெண் வாக்காளர்கள் - 8,24,316 பேர்
மூன்றாம் பாலினத்தவர் 163 பேர் என மொத்தம் 16,19,318 வாக்காளர்கள் உள்ளனர்.