நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - ஸ்ரீபெரும்புதூர்
தமிழ்நாட்டின் 5-வது நாடாளுமன்ற தொகுதி ஸ்ரீபெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர்
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும் ஸ்ரீபெரும்புதூர்.
2008 ஆம் ஆண்டின் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), ஸ்ரீபெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
முன்பு தனித் தொகுதியாக இருந்த ஸ்ரீபெரும்புதூர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் - மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் அடங்கியுள்ளன.
தேர்தல் வரலாறு
1967 சிவசங்கரன் (திமுக)
1971 டி.எஸ். லட்சுமணன் (திமுக)
1977 சீராளன் ஜெகன்னாதன் (அதிமுக)
1980 நாகரத்தினம் (திமுக)
1984 மரகதம் சந்திரசேகர் (காங்கிரஸ்)
1989 மரகதம் சந்திரசேகர் (காங்கிரஸ்)
1991 மரகதம் சந்திரசேகர் (காங்கிரஸ்)
1996 நாகரத்தினம் (திமுக)
1998 டாக்டர் வேணுகோபால் (அதிமுக)
1999 அ. கிருட்டிணசாமி (திமுக)
2004 அ. கிருட்டிணசாமி (திமுக)
2009 த. ரா. பாலு (திமுக)
2014 க. நா. இராமச்சந்திரன் (அதிமுக)
2019 த. ரா. பாலு (திமுக)
வாக்காளர் எண்ணிக்கை
17 ஆவது மக்களவைத் தேர்தல் கணக்கீட்டின் அடிப்படையில், வாக்காளர் எண்ணிக்கை வருமாறு,
ஆண் வாக்காளர்கள் - 11,02,231 பேர்
பெண் வாக்காளர்கள் - 11,08,288 பேர்
மூன்றாம் பாலினத்தவர் 332 பேர் என மொத்தம் 22,10,851 வாக்காளர்கள் உள்ளனர்.