நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - மத்திய சென்னை
தமிழ்நாட்டின் 4-வது நாடாளுமன்ற தொகுதி மத்திய சென்னை.
மத்திய சென்னை
இந்தியாவின் மிகச்சிறிய நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்று மத்திய சென்னை. 2008 ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்புக்கு முன், இந்த தொகுதியில் பூங்கா நகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
இந்த தொகுதிகளில் தனித்தனியாக இருந்த சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி ஒன்றிணைக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட வில்லிவாக்கம் தொகுதி, சென்னை மத்திய தொகுதியில் இணைக்கப்பட்டது.
இம்மக்களவைத் தொகுதியில் வில்லிவாக்கம்,எழும்பூர் (தனி),துறைமுகம்,சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணா நகர் என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
மத்திய சென்னை தொகுதியில் தான், நாட்டிலேயே முதல் முறையாக 2014 ஆம் ஆண்டில், வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை முறை செய்யப்பட்டது.
தேர்தல் வரலாறு
1977 பா. ராமச்சந்திரன் (காங்கிரஸ்)
1980 ஏ. கலாநிதி (திமுக)
1984 ஏ. கலாநிதி (திமுக)
1989 இரா. அன்பரசு (காங்கிரஸ்)
1991 இரா. அன்பரசு (காங்கிரஸ்)
1996 முரசொலி மாறன் (திமுக)
1998 முரசொலி மாறன் (திமுக)
1999 முரசொலி மாறன் (திமுக)
2004 தயாநிதி மாறன் (திமுக)
2009 தயாநிதி மாறன் (திமுக)
2014 எஸ். ஆர். விஜயகுமார் (அதிமுக)
2019 தயாநிதி மாறன் (திமுக)
வாக்காளர் எண்ணிக்கை
17 ஆவது மக்களவைத் தேர்தல் கணக்கீட்டின் அடிப்படையில், வாக்காளர் எண்ணிக்கை வருமாறு,
ஆண் வாக்காளர்கள் - 6,53,358 பேர்
பெண் வாக்காளர்கள் - 6,62,925 பேர்
மூன்றாம் பாலினத்தவர் 320 பேர் என மொத்தம் 13,16,603 வாக்காளர்கள் உள்ளனர்.