நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - வடசென்னை
தமிழ்நாட்டின் இரண்டாவது நாடாளுமன்ற தொகுதி வடசென்னை.
வடசென்னை
2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட மறுசீரமைப்பிற்கு முன் வட சென்னை மக்களவைத் தொகுதியில் இராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் (தனி), திருவொற்றியூர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்பு பெரம்பூர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. வில்லிவாக்கம் தொகுதி பிரிக்கப்பட்டு கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி) எனும் சட்டமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன.
தற்போது, வடசென்னை மக்களவை தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர்,கொளத்தூர்,திரு.வி.க. நகர் (தனி), இராயபுரம்.
தேர்தல் வரலாறு
1957 எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை (சுயேச்சை)
1962 பொ. சீனிவாசன் (காங்கிரஸ்)
1967 கி. மனோகரன் (திமுக)
1971 கி. மனோகரன் (திமுக)
1977 ஏ. வி. பி. ஆசைத்தம்பி (திமுக)
1980 கோ. இலட்சுமணன் (திமுக)
1984 என். வி. என். சோமு (திமுக)
1989 தா. பாண்டியன் (காங்கிரஸ்)
1991 தா. பாண்டியன் (காங்கிரஸ்)
1996 என். வி. என். சோமு (திமுக)
1998 செ. குப்புசாமி (திமுக)
1999 செ. குப்புசாமி (திமுக)
2004 செ. குப்புசாமி (திமுக)
2009 டி. கே. எஸ். இளங்கோவன் (திமுக)
2014 வெங்கடேஷ் பாபு (அதிமுக)
2019 கலாநிதி வீராசாமி (திமுக)
வாக்காளர் எண்ணிக்கை
17 ஆவது மக்களவைத் தேர்தல் கணக்கீட்டின் அடிப்படையில், வாக்காளர் எண்ணிக்கை வருமாறு,
ஆண் வாக்காளர்கள் 7,20,133
பெண் வாக்காளர்கள் 7,47,943
மூன்றாம் பாலினத்தவர் 447 என மொத்தம் 14,68,523 வாக்காளர்கள் உள்ளனர்.