நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - ஆரணி
தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 12-வது தொகுதி ஆரணி.
ஆரணி
வந்தவாசி மக்களவைத் தொகுதி தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக நீக்கப்பட்டு, அதற்குப் பதில் அம்மக்களவை தொகுதியில் இருந்து இருந்த சில தொகுதிகளை எடுத்தும், அரக்கோணம் மக்களவைத் தொகுதியிலிருந்து - செய்யார் தொகுதியும்,
வேலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து ஆரணி தொகுதிகளை எடுத்தும், மயிலம் என்ற புதிய தொகுதியை உருவாக்கி ஆரணி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
தற்போது ஆரணி மக்களவை தொகுதியில் போளூர், ஆரணி, செய்யார். வந்தவாசி (தனி), செஞ்சி மற்றும் மயிலம் போன்ற சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் வரலாறு
2009 எம். கிருஷ்ணசாமி (காங்கிரஸ்)
2014 வி. ஏழுமலை (அதிமுக)
2019 எம். கே. விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்)
வாக்காளர்கள் எண்ணிக்கை
16 ஆவது மக்களவைத் தேர்தல் கணக்கீட்டின் அடிப்படையில், வாக்காளர் எண்ணிக்கை வருமாறு,
ஆண் வாக்காளர்கள் - 7,14,410 பேர்
பெண் வாக்காளர்கள் -7,31,29 பேர்
மூன்றாம் பாலினத்தவர் 78 பேர் என மொத்தம் 14,45,781 வாக்காளர்கள் உள்ளனர்.