நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - நீலகிரி
தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 19-வது தொகுதி நீலகிரி.
நீலகிரி
2008-ஆம் ஆண்டின் தொகுதி மறுசீரமைப்பின் போது, பொதுத்தொகுதியாக இருந்த நீலகிரி தனி தொகுதியாக மாற்றப்பட்டது.
பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை தனித்தொகுதி என குறிப்பார்கள்.
நீலகிரி தொகுதியில் தற்போது பவானிசாகர், உதகமண்டலம், கூடலூர் (தனி), குன்னூர், மேட்டுப்பாளையம் மற்றும் அவினாசி (தனி) போன்ற 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
காங்கிரஸ் கட்சியே அதிக முறை வெற்றி பெற்ற இத்தொகுதி தனி தொகுதியாக்கப்பட்ட பின்பு திராவிட கட்சிகளின் உறுப்பினர்களே இடம்பெறுகின்றனர்.
தேர்தல் வரலாறு
1957 சி.நஞ்சப்பா (காங்கிரஸ்)
1962 அக்கம்மா தேவி (காங்கிரஸ்)
1967 மு. க. நஞ்சே கவுடர் (சுதந்திராக் கட்சி)
1971 ஜெ. மாதே கவுடர் (திமுக)
1977 ராமலிங்கம் (அதிமுக)
1980 இரா. பிரபு (காங்கிரஸ்)
1984 இரா. பிரபு (காங்கிரஸ்)
1989 இரா. பிரபு (காங்கிரஸ்)
1991 இரா. பிரபு (காங்கிரஸ்)
1996 எஸ். ஆர். பாலசுப்ரமணியன் (காங்கிரஸ்)
1998 மாஸ்டர் மதன் (பாமக)
1999 மாஸ்டர் மதன் (பாமக)
2004 இரா. பிரபு (காங்கிரஸ்)
2009 ஆ. இராசா (திமுக)
2014 கோபாலகிருஷ்ணன் (அதிமுக)
2019 ஆ. இராசா (திமுக)
வாக்காளர்கள் எண்ணிக்கை
கடந்த 1.1.2024 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர்கள் பட்டியலின் படி நீலகிரி மாவட்டத்தில்,
ஆண் வாக்காளர்கள் - 2,74,497 பேர்
பெண் வாக்காளர்கள் - 2,99,107 பேர்
மூன்றாம் பாலினத்தவர் 20 என மொத்தமாக 5,73,624 வாக்காளர்கள் உள்ளனர்.