நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - திருப்பூர்

Tamil nadu Election Tiruppur
By Karthick Mar 06, 2024 11:33 PM GMT
Report

தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 18-வது தொகுதி திருப்பூர்.

திருப்பூர்

2008-ஆம் ஆண்டின் மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்ட புதிய மக்களவை தொகுதிகளில் ஒன்று திருப்பூர்.  இத்தொகுதி முன்பு கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி என்று அழைக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - சேலம்

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - சேலம்

ஒரே தொகுதியாக இருந்து வந்த திருப்பூர் சட்டமன்றத் தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு என இரண்டாக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - நாமக்கல்

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - நாமக்கல்

தற்போது திருப்பூர் மக்களவை தொகுதியில் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.  

தேர்தல் வரலாறு

2009 செ. சிவசாமி (அதிமுக)

2014 சத்தியபாமா (அதிமுக)

2019 சுப்பராயன் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி)

இந்த தொகுதியில் 2019-ஆம் ஆண்டின் தேர்தலின் போது, கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான சுப்பராயன் திமுக கூட்டணியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகினார்.

வாக்காளர்கள் எண்ணிக்கை

கடந்த 1.1.2024 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர்கள் பட்டியலின் படி திருப்பூர் மாவட்டத்தில்,

ஆண் வாக்காளர்கள் - 11,50,110 பேர்

பெண் வாக்காளர்கள் - 11,94,358 பேர்

மூன்றாம் பாலினத்தவர் 342 என மொத்தமாக 23,44,810 வாக்காளர்கள் உள்ளனர்.