நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - நாமக்கல்
தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 16-வது தொகுதி நாமக்கல்.
நாமக்கல்
2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது, இராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு தொகுதிகள் நீக்கப்பட்டு புதியதாக நாமக்கல் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
இராசிபுரம் தொகுதியில், முன்னர் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் - சின்னசேலம், ஆத்தூர், தலைவாசல் (தனி), இராசிபுரம், சேந்தமங்கலம் (தனி), நாமக்கல் (தனி).
திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் திருச்செங்கோடு, கபிலர்மலை, சங்ககிரி, எடப்பாடி, மொடக்குறிச்சி, ஈரோடு ஆகிய தொகுதிகள் இருந்தன.
தற்போது நாமக்கல் மக்களவை தொகுதியில் சங்ககிரி, இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), நாமக்கல், பரமத்தி-வேலூர் மற்றும் திருச்செங்கோடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தேர்தல் வரலாறு
2009 செ. காந்திச்செல்வன் (திமுக)
2014 பி. ஆர். சுந்தரம் (அதிமுக)
2019 ஏ. கே. பி. சின்ராஜ் (கொமதேக)
2019-ஆம் ஆண்டின் தேர்தலில் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் ஏ.கே.பி.சின்ராஜ் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர்கள் எண்ணிக்கை
கடந்த 1.1.2024 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர்கள் பட்டியலின் படி நாமக்கல் மாவட்டத்தில் ,
ஆண் வாக்காளர்கள் - 6,93,728 பேர்
பெண் வாக்காளர்கள் - 7,38,383 பேர்
மூன்றாம் பாலினத்தவர் - 196 பேர் என மொத்தமாக 14,32,307 வாக்காளர்கள் உள்ளனர்