நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - திண்டுக்கல்
தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 22-வது தொகுதி திண்டுக்கல்.
திண்டுக்கல்
2008-ஆம் ஆண்டின் தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்பு, இந்த மக்களவை தொகுதியில் திருமங்கலம், உசிலம்பட்டி, நிலக்கோட்டை (தனி), சோழவந்தான், திண்டுக்கல் மற்றும் ஆத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இருந்தன.
மறுசீரமைப்பிற்கு பிறகு தற்போது, பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம் மற்றும் திண்டுக்கல் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இங்கு நடைபெற்ற பொதுத்தேர்தலில், இது வரை அதிகபட்சமாக 7 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதிக முறை வென்ற வேட்பாளராக 4 வெற்றிகளுடன் அதிமுகவின் முக்கிய தலைவர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் உள்ளார்.
தேர்தல் வரலாறு
1952 அம்மு சுவாமிநாதன் (காங்கிரஸ்)
1957 குலாம் முஹைதீன் (காங்கிரஸ்)
1962 டி.எஸ். சௌந்தரம் (காங்கிரஸ்)
1967 என். அன்புச்செழியன் (திமுக)
1971 மு. இராஜாங்கம் (திமுக)
1977 கே. மாயத்தேவர் (அதிமுக)
1980 கே. மாயத்தேவர் (திமுக)
1984 கே. ஆர். நடராஜன் (அதிமுக)
1989 திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் (அதிமுக)
1991 திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் (அதிமுக)
1996 என். எஸ். வி. சித்தன் (தமிழ் மாநில காங்கிரஸ்)
1998 திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் (அதிமுக)
1999 திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் (அதிமுக)
2004 என். எஸ். வி. சித்தன் (காங்கிரஸ்)
2009 என். எஸ். வி. சித்தன் (காங்கிரஸ்)
2014 எம். உதயகுமார் (அதிமுக)
2019 பி.வேலுச்சாமி (திமுக)
வாக்காளர்கள் எண்ணிக்கை
கடந்த 2019-ஆம் ஆண்டின் மக்களவை தேர்தலின் போது, பதிவான வாக்குகளின் படி,
ஆண் வாக்காளர்கள் - 8,13,707 பேர்
பெண் வாக்காளர்கள் - 8,23,696 பேர்
மூன்றாம் பாலினத்தவர் 108 என மொத்தமாக 16,37,511 வாக்குகள் பதிவாகின.