நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - பொள்ளாச்சி
தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 21-வது தொகுதி பொள்ளாச்சி.
பொள்ளாச்சி
2008-ஆம் ஆண்டின் தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்பு இந்த மக்களவை தொகுதியில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, தாராபுரம் (தனி), பொங்கலூர் போன்ற தொகுதிகள் இருந்தன.
தொகுதி சீரமைப்பிற்கு பிறகு, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இந்த தொகுதியில் இது வரை 7 முறை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் அதிகபட்சமாக வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்தல் வரலாறு
1951 ஜி. ஆர். தாமோதரன் (காங்கிரஸ்)
1957 பி. ஆர். இராமகிருஷ்ணன் (காங்கிரஸ்)
1962 சி. சுப்பிரமணியம் (காங்கிரஸ்)
1967 நாராயணன் (திமுக)
1971 நாராயணன் (திமுக)
1971 எம். காளிங்கராயன் (திமுக)
(இடைத்தேர்தல்)
1977 கே. ஏ. ராஜு (அதிமுக)
1980 சி. டி. தண்டபாணி (திமுக)
1984 ஆர். அண்ணா நம்பி (அதிமுக)
1989 பி. ராஜா ரவி வர்மா (அதிமுக)
1991 பி. ராஜா ரவி வர்மா (அதிமுக)
1996 வி. கந்தசாமி (தமிழ் மாநில காங்கிரஸ்)
1998 எம். தியாகராஜன் (அதிமுக)
1999 சி. கிருஷ்ணன் (மதிமுக)
2004 சி. கிருஷ்ணன் (மதிமுக)
2009 கே. சுகுமார் (அதிமுக)
2014 சி. மகேந்திரன் (அதிமுக)
2019 கு. சண்முகசுந்தரம் (திமுக)
வாக்காளர்கள் எண்ணிக்கை
ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி, பொள்ளாச்சி மக்களவை தொகுதியில்,
ஆண் வாக்காளர்கள் - 6,67,676 பேர்
பெண் வாக்காளர்கள் - 6,75,047 பேர்
மூன்றாம் பாலினத்தவர் 13 பேர் என மொத்தமாக 13,42,736 வாக்காளர்கள் உள்ளனர்.