நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - மயிலாடுதுறை

Tamil nadu Election
By Karthick Mar 17, 2024 11:30 PM GMT
Report

தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 28-வது தொகுதி மயிலாடுதுறை.

மயிலாடுதுறை

2008-ஆம் ஆண்டின் மறுசீரமைப்பிற்கு முன்பு, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் கும்பகோணம், திருவிடைமருதூர், குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இருந்தன.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - கடலூர்.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - கடலூர்.

தொகுதி மறுசீரமைப்பிற்கு போது, குத்தாலம் தொகுதி நீக்கப்பட்டு, அதற்குப் பதில் பாபநாசம் தொகுதி சேர்க்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - திருச்சிராப்பள்ளி

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - திருச்சிராப்பள்ளி

தற்போது மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் சீர்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம் மற்றும் பாபநாசம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

தேர்தல் வரலாறு

மயிலாடுதுறை மக்களவை தொகுதியில், காங்கிரஸ் அதிகபட்சமாக 11 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மணிசங்கர் அய்யர் 3 முறை வெற்றி பெற்றுள்ளார்.

1951 இரட்டைஉறுப்பினர் ஆனந்தநம்பியார் (கம்யூனிஸ்ட்) - சந்தானம் (காங்கிரஸ்)

1962 (தனி) மரகதம் சந்திரசேகர் (காங்கிரஸ்)

1967 (தனி) சுப்ரவேலு (திமுக)

1971 (தனி) சுப்ரவேலு (திமுக)

1977 குடந்தை ராமலிங்கம் (காங்கிரஸ்)

1980  குடந்தை ராமலிங்கம் (காங்கிரஸ்)

1984 இ. எசு. எம். பக்கீர்முகம்மது (காங்கிரஸ்)

1989 இ. எசு. எம். பக்கீர்முகம்மது (காங்கிரஸ்)

1991 மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)

1996 பி.வி. இராஜேந்திரன் (தமிழ் மாநில காங்கிரஸ்)

1998 கிருஷ்ணமூர்த்தி (தமிழ் மாநில காங்கிரஸ்)

1999  மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)

2004  மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)

2009 ஓ. எஸ். மணியன் (அதிமுக)

2014 ஆர். கே. பாரதி மோகன் (அதிமுக)

2019 இராமலிங்கம் (திமுக)

2019-ஆம் ஆண்டின் மக்களவை தேர்தலின் போது, திமுகவின் இராமலிங்கம் 2,61,314 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டார்.

வாக்காளர்கள் எண்ணிக்கை

கடந்த 22.01.2024 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலின் படி, மயிலாடுதுறை மாவட்டத்தில்,

ஆண் வாக்காளர்கள் - 3,71,043 பேர்

பெண் வாக்காளர்கள் - 3,79,639 பேர்

மூன்றாம் பாலினத்தவர் - 23 பேர் என மொத்தமாக 7,50,705 வாக்காளர்கள் உள்ளனர்.