நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - கடலூர்.
தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 26-வது தொகுதி கடலூர்.
கடலூர்
2008-ஆம் ஆண்டின் தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்பு உளுந்தூர்ப்பேட்டை (தனி), நெல்லிக்குப்பம், கடலூர், பண்ருட்டி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகியவை கடலூர் மக்களவைத் தொகுதியில் இருந்தன.
மறுசீரமைப்பின் போது நெய்வேலி, திட்டக்குடி (தனி) ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ஆகும்.
தற்போது கடலூர் மக்களவை தொகுதியில், திட்டக்குடி (தனி), விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தேர்தல் வரலாறு
1951-ஆம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்த வரும் கடலூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பி. ஆர். எஸ். வெங்கடேசன் 3 முறை வெற்றி பெற்றுள்ளார்.
1951 கோவிந்தசாமி கச்சிராயர் (தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி)
1957 முத்துக்குமாரசாமி (சுயேட்சை)
1962 இராமபத்ரன் (திமுக)
1967 வி. கே. கவுண்டர் (திமுக)
1971 ச. இராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்)
1977 ஜி. பூவராகவன் (காங்கிரஸ்)
1980 முத்துக்குமரன் (காங்கிரஸ்)
1984 பி. ஆர். எஸ். வெங்கடேசன் (காங்கிரஸ்)
1989 பி. ஆர். எஸ். வெங்கடேசன் (காங்கிரஸ்)
1991 கலியபெருமாள் (காங்கிரஸ்)
1996 பி. ஆர். எஸ். வெங்கடேசன் (காங்கிரஸ்)
1998 எம். சி. தாமோதரன் (அதிமுக)
1999 ஆதி சங்கர் (திமுக)
2004 கே. வெங்கடபதி (திமுக)
2009 கே. எஸ். அழகிரி (காங்கிரஸ்)
2014 அ. அருண்மொழித்தேவன் (அதிமுக)
2019 டி. ஆர். வி. எஸ். ரமேஷ் (திமுக)
கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலின் போது, திமுகவின் டி. ஆர். வி. எஸ். ரமேஷ் சுமார் 1,43,983 வாக்குகள் வித்தியாசத்தில் பாமகவின் கோவிந்தசாமியை வென்றார்.
வாக்காளர்கள் எண்ணிக்கை
கடந்த 22.01.2024 அன்று வெளியிட வாக்காளர்கள் எண்ணிக்கையின் படி, கடலூர் மாவட்டத்தில்,
ஆண் வாக்காளர்கள் - 10,45,551 பேர்
பெண் வாக்காளர்கள் - 10,777,438 பேர்
மூன்றாம் பாலினத்தவர் 287 பேர் என மொத்தமாக 21,23,276 வாக்காளர்கள் உள்ளனர்.