நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - திருச்சிராப்பள்ளி
தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 24-வது தொகுதி திருச்சிராப்பள்ளி.
திருச்சிராப்பள்ளி
தமிழகத்தின் முக்கிய மக்களவை தொகுதிகளில் ஒன்று திருச்சிராப்பள்ளி தொகுதி. 2008-ஆம் ஆண்டின் தொகுதி மறுசீரமைப்பிறகு முன்பு, முசிறி, லால்குடி, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி-I, திருச்சிராப்பள்ளி-II, திருவெறும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இருந்தன.
மறுசீரமைப்பின் போது, திருச்சிராப்பள்ளி I - திருச்சிராப்பள்ளி கிழக்கு என்றும், திருச்சிராப்பள்ளி II - திருச்சிராப்பள்ளி மேற்கு என மாற்றப்பட்டன. கந்தர்வக்கோட்டை (தனி) புதிய தொகுதியாக இணைக்கப்பட்டது.
முன்னர் இருந்த லால்குடி, முசிறி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதுக்கோட்டை தொகுதி இணைக்கப்பட்டது.
தற்போது திருச்சிராப்பள்ளி மக்களவை தொகுதியில், திருவரங்கம், திருச்சிராப்பள்ளி மேற்கு, திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருவெறும்பூர், கந்தர்வக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை போன்ற 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தேர்தல் வரலாறு
இந்த மக்களவை தொகுதியில் இது வரை காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 5 முறை வெற்றி பெற்றுள்ளது. 1984-ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் இந்த மக்களவை தொகுதியில் இருந்து அடைக்கலராசு வெற்றி பெற்றுள்ளார் ( 3 முறை காங்கிரஸ் - 1 முறை தமிழ் மாநில காங்கிரஸ்).
1951 மரு.எட்வர்ட் பவுல் மதுரம் (சுயேட்சை)
1957 எம். கே. எம். அப்துல் சலாம் (காங்கிரஸ்)
1962 கே. ஆனந்த நம்பியார் (கம்யூனிஸ்ட்)
1967 கே. ஆனந்த நம்பியார் (கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட்)
1971 மீ. கல்யாணசுந்தரம் (கம்யூனிஸ்ட்)
1977 மீ. கல்யாணசுந்தரம் (கம்யூனிஸ்ட்)
1980 என். செல்வராஜ் (திமுக)
1984 அடைக்கலராசு (காங்கிரஸ்)
1989 அடைக்கலராசு (காங்கிரஸ்)
1991 அடைக்கலராசு (காங்கிரஸ்)
1996 அடைக்கலராசு (தமிழ் மாநில காங்கிரஸ்)
1998 ப. ரங்கராஜன் குமாரமங்கலம் (பாஜக)
1999 ப. ரங்கராஜன் குமாரமங்கலம் (பாஜக)
2001 இடைத்தேர்தல் தலித் எழில்மலை (அதிமுக)
2004 எல். கணேசன் (மதிமுக)
2009 ப. குமார் (அதிமுக)
2014 ப. குமார் (அதிமுக)
2019 சு. திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)
கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான திருநாவுக்கரசு இந்த தொகுதியில் போட்டியிட்டு, சுமார் 4,59,286 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிகவின் மருத்துவர் வி.இளங்கோவனை தோற்கடித்தார்.
வாக்காளர்கள் எண்ணிக்கை
கடந்த 1.1.2024 ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை பட்டியலின் படி 11 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்,
ஆண் வாக்காளர்கள் - 11,11,573 பேர்
பெண் வாக்காளர்கள் - 11,79,985 பேர்
மூன்றாம் பாலினத்தவர் 332 என மொத்தமாக 22,91,890 வாக்களர்கள் உள்ளனர்.

வீட்டுல இட்லி மாவு இல்லையா? அப்போ சுரைக்காய் வைத்து இட்லி சுடுங்க.. எப்படி-ன்னு தெரிஞ்சிக்கோங்க Manithan

பெண் மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமை : முன்னாள் இராணுவ வீரரின் வாக்குமூலத்தால் திடீர் திருப்பம் IBC Tamil
