நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - சிதம்பரம்
தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 27-வது தொகுதி சிதம்பரம்.
சிதம்பரம்
2008-ஆம் ஆண்டின் தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்பு, சிதம்பரம் மக்களவை தொகுதியில், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார்கோயில் (தனி), சிதம்பரம், விருத்தாச்சலம், மங்களூர் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
தொகுதி மறுசீரமைப்பின் போது, குன்னம் தொகுதி சிதம்பரம் மக்களவை தொகுதியில் இணைக்கப்பட்டது.தற்போது இந்த மக்களவை தொகுதியில் குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் (தனி) என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இது பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.
தேர்தல் வரலாறு
சிதம்பரம் மக்களவை தொகுதியில் அதிகபட்சமாக காங்கிரஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி. வள்ளல்பெருமான் 3 முறை வெற்றி பெற்றுள்ளார்.
1957 ஆர். கனகசபை பிள்ளை (காங்கிரஸ்)
1962 ஆர். கனகசபை பிள்ளை (காங்கிரஸ்)
1967 வி. மாயவன் (திமுக)
1971 வி. மாயவன் (திமுக)
1977 முருகேசன் (அதிமுக)
1980 பி.குழந்தைவேலு (திமுக)
1984 பி. வள்ளல்பெருமான் (காங்கிரஸ்)
1989 பி. வள்ளல்பெருமான் (காங்கிரஸ்)
1991 பி. வள்ளல்பெருமான் (காங்கிரஸ்)
1996 வி.கணேசன் (திமுக)
1998 தலித் எழில்மலை (பாமக)
1999 இ. பொன்னுசாமி (பாமக)
2004 இ. பொன்னுசாமி (பாமக)
2009 தொல். திருமாவளவன் (விசிக)
2014 எம். சந்திரகாசி (அதிமுக)
2019 தொல். திருமாவளவன் (விசிக)
கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதிமுகவின் சந்திரசேகரனை விட 3,219 பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
வாக்காளர்கள் எண்ணிக்கை
ஆண் வாக்காளர்கள் - 7,42,406 பேர்
பெண் வாக்காளர்கள் - 7,37,757 பேர்
மூன்றாம் பாலினத்தவர் 59 பேர் என மொத்தமாக 14,80,222 வாக்காளர்கள் உள்ளனர்.