இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து கே.எல்.ராகுல் விலகல்?

KL Rahul Indian Cricket Team
1 மாதம் முன்

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து கே.எல்.ராகுல் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி.20 தொடர் 

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இத்தொடருக்கான இந்திய அணியில் மூத்த வீரர்கள் இடம்பெறவில்லை. ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து கே.எல்.ராகுல் விலகல்? | Kl Rahul Withdraws From Series Against England

மூத்த வீரர்கள் அடங்கிய இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க, இங்கிலாந்து புறப்பட்டுச் செல்ல உள்ளது.

ராகுல் திராவிட், ஸ்ரேயஸ் ஐயர் உட்பட இரண்டாவது இந்திய அணிக் குழு வரும் 20ஆம் தேதி இங்கிலாந்து செல்ல உள்ளது.

அங்கு சென்றப் பிறகு 24ஆம் தேதி, கவுண்டி அணிக்கு எதிராக இந்தியா டெஸ்ட் விளையாட உள்ளது. அடுத்து ஜூலை 1 முதல் 5ஆம் தேதிவரை, இங்கிலாந்தை எதிர்த்து, 2021 ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கொரோனா காரணமாக ஒரு போட்டி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

கே.எல். ராகுல் விலகல்

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய கே.எல். ராகுல் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து கே.எல்.ராகுல் விலகல்? | Kl Rahul Withdraws From Series Against England

இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், கே.எல் ராகுல் இன்னும் காயத்திலிருந்து மீளவில்லை. டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்கள் மும்பையில் கூடுகின்றனர்.

நள்ளிரவில் இங்கிலாந்து புறப்படுகின்றனர். கே.எல். ராகுல் அந்த அணியுடன் பயணிக்கவில்லை. இந்த வார இறுதியில் உடற்தகுதித் தேர்வில் ராகுல் பங்கேற்க உள்ளார். எனினும், காயத்திலிருந்து மீள அவர் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ள உள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நம்பர் 1 ஆசை போச்சா..?? விராட் கோலியை வெளுத்து வாங்கிய பாக். வீரர்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.