நம்பர் 1 ஆசை போச்சா..?? விராட் கோலியை வெளுத்து வாங்கிய பாக். வீரர்

Virat Kohli
By Irumporai Jun 15, 2022 02:38 PM GMT
Report

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆஃபிரிடி கடுமையாக விமர்சித்துள்ளார். கிரிக்கெட் உலகின் முன்னணி வீரரான விராட் கோலி, கடந்த இரண்டரை வருடங்களாக தனது ஆதிக்கத்தை சர்வதேச கிரிக்கெட்டில் இழந்துவிட்டார்.

தற்போது விராட் கோலி 27 சதத்தை தாண்டவில்லை. ஆனால் ஜோ ரூட் 27 ஐ தொட்டுவிட்டார். ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் சாதனையை கோலி தான் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோலி தற்போது பந்தயத்திலேயே இல்லை.

சறுக்கிய விராட் கோலி

எங்கேயோ இருந்து வந்த ரூட், சச்சின் சாதனையை நெருங்கி விட்டார். ஐபிஎல் தொடரில் 3 கோல்டன் டக் என 341 ரன்கள் மட்டுமே கோலி அடித்திருக்கிறார். விராட் கோலி கிரிக்கெட்டை விட தற்போது குடும்பத்தோடு தான் அதிக நேரத்தை செலவிடுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

நம்பர் 1 ஆசை போச்சா..?? விராட் கோலியை வெளுத்து வாங்கிய பாக். வீரர் | Afridi Blast Virat Kohli Attitude Over Cricket

இங்கிலாந்து தொடருக்காக ரோகித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், விராட் கோலி மாலத்தீவில் குடும்பத்துடன் விடுமுறையை கழித்து வருகிறார். இந்த நிலையில் தான் பாகிஸ்தான் வீரர் ஆஃபிரிடி, விராட் கோலியை கடுமையாக சாடியுள்ளார். அதில், விராட் கோலிக்கு நம்பர் 1 வீரராக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் போய்விட்டது.

ஆஃபிரிடி கிண்டல்

முன்பு ஒரு காலத்தில் நம்பர் 1 வீரராக இருக்க வேண்டும் என்ற வெறி விராட் கோலிக்கு இருந்தது. தற்போதே அதே உத்வேகம் இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்குள் வந்துவிட்டது. கிரிக்கெட்டில் அனைத்தையும் சாதித்து விட்டோம்.

இனி ஜாலியாக பொழுதை கழிக்கலாம் என்ற யோசனையில் விராட் கோலி உள்ளாரா என்று தெரியவில்லை. Attitude தான் கிரிக்கெட்டுக்கு முக்கியம் என்று ஆஃபிரிடி கூறியுள்ளார்.