டி20 தொடரில் இருந்துவிலகிய இந்திய வீரர்கள் , காரணம் என்ன ?

KL Rahul
By Irumporai Jun 08, 2022 01:40 PM GMT
Report

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டி20ஐ தொடரில் இருந்து இந்திய வீரர்கள் கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் விலகியுள்ளனர் .

நடைபெற உள்ள இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா தொடரில் காயம் காரணமாக இந்திய அணி வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதாவ் விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

விலகிய ராகுல்

இந்த நிலையில் வலது இடுப்பில் காயம் காரணமாக இந்திய அணி கேப்டன் கே.எல் ராகுல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20ஐ தொடரில் இருந்து விலகியுள்ளார். இதுபோன்று குல்தீப் யாதவ் நேற்று மாலை  வலை பயிற்சி செய்யும்போது வலது கையில் அடிபட்டதால் டி20ஐ தொடரில் இருந்து விலகினார் என்றும் கூறியுள்ளது.

இதனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனிடையே, தென்னாபிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், நாளை முதல் டி20 தொடர் தொடங்கவுள்ளது.

அவருக்கு பதில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவும் விலகியுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டி20   தொடரில் இருந்துவிலகிய இந்திய வீரர்கள் , காரணம் என்ன ? | Kl Rahul Kuldeep Yadav Withdraw Bcci Announcement

இந்த நிலையில் நாளை டெல்லியில் முதலாவது 20 ஓவர் போட்டி நடைபெற உள்ள நிலையில், காயம் காரணமாக இந்திய அணியின் முக்கிய வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் விலகியுள்ள நிலையில் , விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.