மாநிலங்களவை நியமன எம்.பியாக இளையராஜா,பி.டி.உஷா நியமனம்..!

Ilayaraaja BJP Narendra Modi Government Of India
By Thahir Jul 06, 2022 03:24 PM GMT
Report

மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இளையராஜா மற்றும் பி.டி உஷா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இளையராஜா எம்.பியாக தேர்வு

கலை,இலக்கியம்,விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும் முக்கிய பங்காற்றியவர்களுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு வழங்கப்படும்.

நாடாளுமன்றத்தில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள்.அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா,தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Narendra Modi

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து 

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜா மற்றும் பி.டி.உஷாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில்,தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்தவர் இளையராஜா. எளிய பின்னணியில் இருந்து உயர்ந்து பல சாதனைகளை செய்துள்ளார் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் விளையாட்டில் பல சாதனைகளை புரிந்து விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டியாக அவர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது என பி.டி.உஷாவிற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான காலம் குறைப்பு