பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான காலம் குறைப்பு

COVID-19 COVID-19 Vaccine
By Irumporai Jul 06, 2022 12:46 PM GMT
Report

 கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள உள்ளூர் தயாரிப்புகளான கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் குடி மக்களுக்கு செலுத்தபட்டது.

கடந்த ஆண்டு ஜனவரி 16ந்தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

பூஸ்டர் டோஸ்

60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பூஸ்டர் தடுப்பூசிக்கு கால இடைவெளி 9 மாதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான காலம் குறைப்பு | Covid 19 Booster Dose Gap Reduced

கால அவகசாம் நீடிப்பு

இந்த நிலையில், கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளி 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான காலம் குறைக்கப்பட்டுள்ளது.