பூண்டு, வெங்காயம் உரிக்க கஷ்டமா இருக்கா? இப்படி ட்ரை பண்ணி பாருங்களேன்!
பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய சமையல் குறிப்புகள் பற்றிப் பார்ப்போம்.
சமையல் குறிப்புகள்
சமையல் வேலை சீக்கிரம் முடியவும், பயனுள்ள சில குறிப்புகளையும் தெரிந்துக் கொள்வோம்.
தோசை மற்றும் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு வெண்டைகாய் சேர்த்து ஆட்டினால் இட்லி தோசை பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.
சாதம் மிஞ்சி விட்டால் ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து சாதத்தை ஆவியில் சூடு பண்ணலாம். காய்த்து போன ரொட்டித் துண்டுகளை இட்லி பாத்திரத்தில் ஆவியில் அவித்தால் மீண்டும் புதியது போல் ஆகிவிடும்.
கத்தியின் கூரிய பகுதியை உப்பில் அழுத்தி எடுத்தால் மீன், மாமிசம் போன்றவற்றை ஈஸியாக நறுக்கலாம். வெங்காயம், பூண்டு இவற்றை எளிதாக உரிக்க தண்ணீரில் போட்டு உரிக்கலாம். இதனால் கண்ணீர் வருவதையும் தவிர்க்கலாம்.