அரிசி சாதம் அதிகம் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் ஆபத்து வருமா? அலசுவோம்

life-style-health
By Nandhini Jul 15, 2021 12:35 PM GMT
Report

சமீப வருடங்களாக வெள்ளை சாதம் என்றாலே பதறி ஓடும் அளவிற்கு தவறான ஆரோக்கிய கருத்தைக் கொண்டுள்ளது.

அதை உறுதி படுத்தும் விதமாக தற்போது மீண்டும் மற்றொரு ஆய்வு வந்துள்ளது. அதாவது வெள்ளை சாதம்தான் உடல் எடை அதிகரிக்கக் காரணம் என்பதால் பலரும் வெள்ளை சாதத்தை தவிர்த்து வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து இரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிக்கவும் வெள்ளை சாதம் தான் காரணம் என்று ஆய்வு வெளியாகியுள்ளது. உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருவதில்லை. அதனை அவன் எப்படி சாப்பிடுகிறான் என்பதை பொறுத்துதான் வருகிறது.

உடல் உழைப்பு அதிகம் இருந்த நம் முந்தைய தலைமுறையினர் பெரும்பாலும் சாதத்தை வடித்து சாப்பிடுவதோடு அதில் செய்யப்படும் கஞ்சியையும் உண்டு வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் குக்கரில் செய்யப்படும் உணவில் ஸ்டார்ச் சாதத்துடன் தங்கிவிடுகிறது. இது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு குளுக்கோஸை அதிகமாக்கிவிடுகிறது. கொதிக்கக் கொதிக்க சாதத்தை சாப்பிடக்கூடாது.

இதன் அடிப்படையில், தொடர்ந்து அரிசி சாதம் சாப்பிட்டு வருபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அரிசி சாதத்தை இப்படி சாப்பிட்டால் நன்மை பயக்கும் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

அரிசி சாதம் அதிகம் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் ஆபத்து வருமா? அலசுவோம் | Life Style Health

உடலுக்கு குளிர்ச்சி

சாதத்தில் தண்ணீர் ஊற்றி, மறுநாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் ஆகியவை பாதிக்காமல் பாதுகாக்கிறது.

நீரிழிவு

தினமும், அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் அது தவறு. நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். இன்று குக்கரில் வேகவைத்த சாதத்தை பலரும் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.

கண் எரிச்சல்

சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம், ஆகியவை சரியாகும்.

நீர்க்கடுப்பு

கஞ்சியை ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும். சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும். 

மூட்டு வாதம்

சாதத்தை மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும். ஆனால் சாதத்தை சில்லென்று, ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.