அரிசி தண்ணீரை முகத்தில் இப்படி தான் யூஸ் பண்ணனும் - ட்ரெண்டாகும் கொரியர்களின் ரகசியம்!
அரிசி தண்ணீரின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
அரிசி தண்ணீர்
அரிசியில் மட்டுமல்ல அரிசியை கழுவும் தண்ணீரிலும் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. அரிசியை நன்கு கழுவி பின்னர் ஊறவைத்து எடுக்கும் தண்ணீர் நமது உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது சருமத்தில் உள்ள கோடுகள், சுருக்கங்களை குறைக்கிறது மற்றும் இயற்கையான பிரகாசத்தை அளிக்கிறது. பெரும்பாலானோர் தங்களது சருமம் மற்றும் முடி அழகை பாதுகாக்க அரிசி தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.
பயன்கள்
அரிசி கழுவிய தண்ணீரில் ஃபெருலிக் அமிலம், சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அலன்டோயின் உள்ளது. அழற்சியை போக்குகிறது. அரிக்கும் தோலழற்சி மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளை குறைத்து நன்மை பயக்கும். மேலும் சருமத்தில் உள்ள கருப்பு திட்டுகள், வீக்கம் மற்றும் சிவத்தல் உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது.
இதன் ஈரப்பதமூட்டும் பண்புகள் சருமத்தை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது ஒரு இயற்கையான டோனராக செயல்படுகிறது. சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்துகிறது மற்றும் நீரேற்றமாக வைத்திருக்கிறது.
இதனால் உங்கள் சருமம் எப்போதும் இளமையாக காட்சியளிக்கும்.
கொரியன் ஸ்கின் கேரில் பலரும் இந்த அரிசி தண்ணீரை தான் முக்கியமாக பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.