அரிசி கழுவிய நீரை வீணாக்குறீங்களா?உடனே நிறுத்துங்க..தலை முடி முக்கியம் !
நாம் தினமும் உண்ணும் அரிசியை கழுவி ஊற்றும் நீரில் உள்ள நன்மைகளை பற்றி காண்போம்.
அரிசி கழுவிய நீர்
நான் அன்றாட உண்ணும் உணவில் அரிசி ஒரு பிரதான இடத்தை பிடித்துள்ளது. அரிசியை சமைப்பதற்கு முன் அதனை ஊறவைத்து, நன்றாக கழுவிய பின்பு தான் சமைக்க தொடங்குவோம்.
ஆனால்,அப்படி கீழே ஊற்றும் தண்ணீரில் இத்தனை சத்துக்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்,மேல் நாடுகளில் தங்களது அழகை பராமரிக்க இந்த நீரை பரவலாக பயன்படுத்துவது உண்டு. அப்படி அதில் என்ன இருக்கு என்று தெரிந்துகொள்வோம்.
சருமம்
அரிசி தண்ணீரின் பளபளக்கும் மற்றும் டோனின் பண்புகளுக்காக அது ஆசிய சரும பராமரிப்பில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அரிசி கழுவிய நீரை வடித்து அதனை ஒரு பாட்டிலில் வைத்துகொண்டு அவ்வப்போது உங்கள் முகத்தில் தெளித்து வந்தால் சருமத்தை சுத்தம் செய்யும்,வறட்சியை போக்கும். சருமம் தளராமல் அதை இறுக்கமாக வைத்திருக்கும், மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவும். இதனால் நீங்கள் இளமையுடன் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கூந்தல்
அரிசி தண்ணீரில் அதிக அளவு வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கிறது. அரிசி கழுவிய நீரை கூந்தலுக்கு பயன்படுத்தும் போது, 7 மணி நேரம் ஊற வைத்த நீரை உங்கள் முடிக்கும் ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு குளித்த பின், தலை உச்சியில் இருந்து முடி நுனி வரை ஊற்றி ஒரு 10 நிமிடம் ஊற வைத்து அலசவேண்டும்.
இப்படியாக செய்து வர கூந்தலின் வளர்ச்சி தடைபடாது. கூந்தலுக்கு போஷாக்கும், பொலிவும் கிடைக்கும். முடி உதிர்வு, நுனி வெடிப்பு, வறட்சி போன்ற பிரச்சனைகளும் வராமல் தவிர்க்கலாமாம்.
குழந்தைகள் குளிக்க
அரிசி கழுவிய தண்ணீரை சூடாக்கி வெதுவெதுப்பான நீரை கொண்டு குழந்தைகளின் கால்களை பிடித்து ஊற்றலாம்.
உடல் முழுவதும் ஊற்றி குளிக்க வைப்பதால், உடல் மற்றும் கால்களுக்கு பல கிடைக்கும். இதனால் குழந்தைகள் சீக்கிரம் எழுந்து நடக்க உதவும்.இந்த முறை இன்றளவிலும் தமிழகத்தில் பல பகுதிககளில் பின்பற்றி வருகின்றனர்.